search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை நடத்தும் ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
    X

    ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை நடத்தும் ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    • ஆய்வுக்கான உத்தரவு வழிபாட்டு உரிமை சட்டத்துக்கு எதிரானது.
    • ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தப்படாது என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் வாதிட்டது.

    இந்திய அகழாய்வுத்துறை கடந்த மாதம் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொடங்கியதும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்து, மசூதி கமிட்டியை உயர் நீதிமன்றத்தை அணுக கூறியது.

    மசூதி கமிட்டி மனு மீது கடந்த மாதம் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற்று தீர்ப்பு நேற்றைய தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். அதன்படி நேற்று காலை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது கீழமை நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது. இதன்மூலம் ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மசூதி கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    இதில், ஆய்வுக்கான உத்தரவு வழிபாட்டு உரிமை சட்டத்துக்கு எதிரானது என்று மசூதி கமிட்டி தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

    ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்தப்படாது என்று இந்திய தொல்லியல் துறை சார்பில் வாதிடப்பட்டது.

    இந்நிலையில், ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை நடத்தும் ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், மசூதி கமிட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்தது.

    ஞானவாபி மசூதிக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆய்வை மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அகழாய்வு கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×