குரங்குகளுக்கு கருத்தடை ஆபரேசன்- நெற்றியில் திரிசூல பச்சையுடன் வலம் வருகின்றன

குரங்குகள் பெருகுவதைத் தடுக்க, அவற்றுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. 3 வயதுடைய குரங்குகள் அடையாளம் காணப்பட்டு, கருத்தடை ஆபரேசன் செய்யப்படுகின்றன.
குரங்குகளுக்கு கருத்தடை ஆபரேசன்- நெற்றியில் திரிசூல பச்சையுடன் வலம் வருகின்றன
Published on

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தின் சாரங்கபூர் மண்டலத்தில் குரங்குகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. நாளுக்கு நாள் அவற்றின் தொல்லை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

குரங்குகள் பெருகுவதைத் தடுக்க, அவற்றுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. 3 வயதுடைய குரங்குகள் அடையாளம் காணப்பட்டு, கருத்தடை ஆபரேசன் செய்யப்படுகின்றன.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, எதிர்காலத்தில் அவற்றை அடையாளம் காண குரங்குகளின் நெற்றியில் திரிசூல வடிவ பச்சை குத்தப்படுகிறது.

குரங்குகளுக்கு இந்த பச்சை குத்துதல் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என்று கால்நடை மருத்துவர் த்துவர் ஸ்ரீகர் ராஜு கூறினார். இதுவரை, சுமார் 1650 குரங்குகளுக்கு ஆபரேசன் செய்யப்பட்டு பச்சை குத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com