என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவின் உருக்கு மனிதர் ஜாம்ஷெட் இரானி மரணம்
    X

    'இந்தியாவின் உருக்கு மனிதர்' ஜாம்ஷெட் இரானி மரணம்

    • 43 ஆண்டுகள் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
    • இரானிக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கவுரவித்துள்ளது.

    ஜாம்ஷெட்பூர் :

    டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜாம்ஷெட் ஜே.இரானி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. அவர் 'இந்தியாவின் உருக்கு மனிதர்' என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

    இரானி, கடந்த 1936-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் நாக்பூரில் கோர்ஷெட் இரானி-ஜீஜீ தம்பதிக்கு மகனாக பிறந்தார். இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளை நாக்பூரிலேயே முடித்தார். 1960-ம் ஆண்டு, இங்கிலாந்தில் ஷெபீல்டு பல்கலைக்கழகத்தில் உலோகவியல் படித்தார். அதில் பிஎச்.டி. பட்டமும் பெற்றார்.

    பின்னர், இங்கிலாந்திலேயே ஒரு இரும்பு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 1968-ம் ஆண்டு இந்தியா திரும்பி, டாடா ஸ்டீல் நிறுவனத்தில் சேர்ந்தார். அதன் நிர்வாக இயக்குனராக உயர்ந்தார். 43 ஆண்டுகள் அந்நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

    இரானிக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கவுரவித்துள்ளது. அவருக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

    Next Story
    ×