என் மலர்
இந்தியா

திருமணம் தொடர்பான பதிவுகளை நீக்கிய ஸ்மிருதி... உடனே ரியாக்ட் செய்த பலாஷ் முச்சல் தங்கை!
- திருமணம் தொடர்பான பதிவுகளை நீக்கிய ஸ்மிருதி மந்தனா.
- குடும்பங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என பலாஷ் முச்சலின் தங்கை கோரிக்கை
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் நேற்று முன்தினம் (நவ.23) திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஸ்ருமிதியின் வருங்கால கணவர் பலாஷ் முச்சலுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இச்செய்தி ஸ்ருமிதி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஸ்மிருதி தனது திருமணம் தொடர்பான அனைத்து இன்ஸ்டாகிராம் பதிவுகளையும் நீக்கினார். இதனால் இணையவாசிகள் பலரும் பல கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் பலாஷ் முச்சலின் சகோதரியான பலாக் முச்சல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "ஸ்மிருதியின் தந்தையின் உடல்நிலை காரணமாக, ஸ்மிருதி மற்றும் பலாஷின் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.






