சசி தரூர் மகனை வேலையை விட்டு நீக்கிய வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம்

சசி தரூரின் மகன் இஷான் தரூரை தி வாஷிங்டன் போஸ்ட் வேலையை விட்டு நீக்கியுள்ளது. 300 ஊழியர்களை தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.
சசி தரூர் மகனை வேலையை விட்டு நீக்கிய வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம்
Published on

கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருபவர் சசி தரூர். இவர் சமீபகாலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்தும், பாராட்டியும் பேசி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், சசி தரூரின் மகன் இஷான் தரூரை தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

இஷான் தரூர் உடன் கிட்டத்தட்ட 300 ஊழியர்களை தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளது.

இதுகுறித்து இஷான் தரூர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தில் இருந்து நான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக என் நண்பர்களாகவும் ஒத்துழைப்பாளர்களாகவும் இருந்த ஆசிரியர்கள் மற்றும் நிருபர்களுக்காகவும் நான் மனம் உடைந்தேன். அவர்களுடன் பணியாற்றுவது ஒரு மரியாதை. உலகத்தையும் அதில் அமெரிக்காவின் இடத்தையும் வாசகர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில் ஜனவரி 2017 இல் WorldView பத்தியைத் தொடங்கினேன். மேலும் பல ஆண்டுகளாக வாரத்திற்கு பல முறை இந்தப் பத்தியைப் படித்த 5 லட்சம் விசுவாசமான சந்தாதாரர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com