search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி இணைந்து போட்டியிட சரத்பவார் விருப்பம்
    X

    2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி இணைந்து போட்டியிட சரத்பவார் விருப்பம்

    • சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முன்வைக்கும் எந்த காரணங்களும் அர்த்தம் இல்லாதவை.
    • சிவசேனா யாருக்கு என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

    அவுரங்காபாத் :

    மராட்டியத்தில் சிவசேனா தலைமையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடத்திவந்த கூட்டணி ஆட்சி சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் கவிழ்ந்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே அவர்களின் முதன்மை கோரிக்கையாக இருந்தது. ஷிண்டே தலைமையில் பிரிந்துசென்ற சிவசேனா அதிருப்தி அணியினர், பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றினர்.

    ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவியேற்றார். இந்தநிலையில் அவுரங்காபாத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எதிர்காலத்தில் வரவிருக்கும் தேர்தல்களிலும் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடவேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். ஆனால் இது எனது தனிப்பட்ட கருத்து தான். முதலில் கட்சி தலைவர்களுடன் இதுகுறித்து விவாதித்துவிட்டு, கூட்டணி கட்சிகளுடனும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் திடீர் மன மாற்றத்திகான காரணம் குறித்து நிலையான காரணத்தை இதுவரை கூறவில்லை. சில நேரங்களில் இந்துத்வா கொள்கையில் இருந்து தலைமை விலகி சென்றது தான் காரணம் என்கிறார்கள். சிலர் தங்கள் தொகுதிக்கு சரியான நிதி கிடைக்கவில்லை என்கிறார்கள். ஆனால் இவர்கள் முன்வைக்கும் எந்த காரணங்களும் ஒரு அர்த்தமும் இல்லாதவையாகும்.

    அவுரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் நகரங்களில் பெயர் மாற்றுவது குறித்து மகா விகாஸ் அகாடி அரசு இயற்றிய குறைந்தபட்ச செயல்திட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை. இந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகு தான் எனக்கு தெரியும். இந்த முடிவு முன் ஆலோசனை இல்லாமல் எடுக்கப்பட்டது. அப்போதைய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இதற்கு பதிலாக அவுரங்காபாத் நலன் குறித்து ஏதேனும் முடிவு எடுத்திருந்தால், மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எப்படி இருக்கும் என்று ஊகிக்க விரும்பவில்லை. நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சிவசேனா யாருக்கு என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×