search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உயர்வுடன் தொடங்கியது மும்பை பங்கு சந்தை
    X

    உயர்வுடன் தொடங்கியது மும்பை பங்கு சந்தை

    • திங்கட்கிழமை மும்பை பங்கு சந்தை சரிவை சந்தித்தது
    • நேற்றும் இன்றும் உயர்வை சந்தித்துள்ளது

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் உலகளவில் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. போர் தொடங்கியதும் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது.

    நேற்று முன்தினம் மும்பை பங்கு சந்தை, இந்திய பங்கு சந்தையில் சரிவு காணப்பட்டது. இந்த சரிவு இந்த வாரம் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், நேற்று வர்த்தகம் உயர்ந்தே காணப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மும்பை பங்கு சந்தை தொடங்கியதும் வர்த்தகம் 300 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.

    நேற்று மும்பை பங்கு சந்தை வர்த்தகம் சென்செக்ஸ் 66,079.36 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று காலை வர்த்தகம் சென்செக்ஸ் 66,376.42 புள்ளிகளுடன் ஆரம்பமானது. அதிகபட்சமாக 66,571.98 புள்ளிகள் வர சென்றது. குறைந்த பட்சமாக 66,299.79 புள்ளிகளுக்கு இறங்கியது.

    அதேபோல் நிஃப்டியும் தொடக்கத்தில் உயர்வை சந்தித்தது நேற்று 19,689.85 புள்ளிகளுடன் நிறைவடைந்த, இந்திய பங்கு சந்தை நிஃப்டி வர்த்தகம் 19,767.00 புள்ளிகளுடன் தொடங்கியது. தற்போது 19,805.05 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது. அதிகபட்சமாக 19,832 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 19,756.95 வர்த்தகமானது.

    மத்திய கிழக்கு பகுதியில் இந்த சண்டை மிகப்பெரிய அளவில் நெருக்கடியாக மாறாது, எண்ணெய் விலை உயரும் என்கிற நம்பிக்கையில் இந்த உயர்வு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

    ஆசியாவின் ஜப்பான், சீனா, ஹாங்காங் பங்கு சந்தைகளும் உயர்வை கண்டுள்ளன. நேற்று ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா சந்தைகளும் உயர்வுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×