என் மலர்tooltip icon

    இந்தியா

    தங்கம், வெள்ளி விலை உயர்வு குறித்து நிர்மலா சீதாராமன் கூறுவது?
    X

    தங்கம், வெள்ளி விலை உயர்வு குறித்து நிர்மலா சீதாராமன் கூறுவது?

    • இந்தியாவில் ஏறக்குறைய மார்க்கெட்டிற்கு வரும் அனைத்து தங்கங்களும் இறக்குமதி மூலம் வருகிறது.
    • நாம் இறக்குமதியை சார்ந்திருக்கும் நாடு.

    சாமானிய மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை வாங்க முடியாத நிலைக்கு, அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தங்கம் விலை பவுனுக்கு 100 ரூபாய், 200 ரூபாய் என உயர்ந்து வந்த நிலையில் கடந்த தீபாளிக்குப் பிறகு திடீர் திடீரென பவுனுக்கு ஆயிரம் கணக்கில் உயரத் தொடங்கியது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ஆயிரம் என்ற வகையில் அதிரடியாக உயர்ந்தது.

    தங்கம் விலை கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இந்த நிலையில் பட்ஜெட்டிற்குப் பிறகு மத்திய நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன் ரிசர்வ் வங்கியின் இயக்குனர்களின் மத்திய குழுவை சந்தித்தார்.

    அப்போது அவரிடம் தங்கம் விலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன் "இந்தியாவில் ஏறக்குறைய மார்க்கெட்டிற்கு வரும் அனைத்து தங்கங்களும் இறக்குமதி மூலம் வருகிறது. நாம் இறக்குமதியை சார்ந்திருக்கும் நாடு. நாம் முயற்சிகள் எடுத்து வந்தாலம், நமது தேவைக்கு ஏற்ப அது போதுமானது இல்லை.

    வீட்டில் உள்ளவர்கள் முதலீடு செய்வதற்கு உகந்ததாக தங்கம் உள்ளது. சீசன் காரணமாக உள்ளூர் சந்தைகளில் அதிக அளவு தேவைப்படுகிறது. நாங்கள் அதை கவனித்துக் கொண்டிருக்கிறோம். எச்சரிக்கையான சூழ்நிலை என்ற அளவை அது அடையவில்லை.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×