search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லல்லு குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
    X

    லல்லு குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

    • ரெயில்வேயின் குரூப்-டி, தேர்வுகளில் சிலர் விதிமுறைகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டனர்.
    • லல்லு பிரசாத்தின் குடும்பத்தினர் அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

    கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரெயில்வே மந்திரியாக லல்லு பிரசாத் பதவி வகித்தார். அப்போது ரெயில்வேயின் குரூப்-டி, தேர்வுகளில் சிலர் விதிமுறைகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டனர்.

    அதற்கு லஞ்சமாக வேலை பெற்றவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான சுமார் 1.05 லட்சம் சதுரஅடி நிலம் லல்லு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது. அந்த நிலத்தை சந்தை மதிப்பை விட குறைந்த விலைக்கு லல்லு குடும்பத்தினர் நேரடியாக வாங்கியுள்ளனர் என்று சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    லல்லு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிரான விசாரணையில் பீகார் மாநிலம் பாட்னா மற்றும் உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள 6 அசையா சொத்துகள், டெல்லியில் உள்ள 4 மாடி பங்களா, பாட்னாவில் உள்ள 2 நிலங்கள், காஜியாபாத்தில் உள்ள 2 தொழில் மனைகளின் ஒரு பகுதி என லல்லு பிரசாத்தின் குடும்பத்தினர் அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

    சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள இந்தச் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.6.02 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×