என் மலர்tooltip icon

    இந்தியா

    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து
    X

    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து

    • தாயார் கமலா சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
    • மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

    பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் கஞ்சா வைத்திருந்ததாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில், ஆட்கொணர்வு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

    இதனை அடுத்து, தமிழக அரசின் வாதத்தை ஏற்று சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவரது தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்தது.

    Next Story
    ×