search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கட்சிக்குள் கலகம் விளைவிப்பவர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனை: அகிலேஷ் யாதவ்
    X

    கட்சிக்குள் கலகம் விளைவிப்பவர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனை: அகிலேஷ் யாதவ்

    • பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக உள்ளே எதிர் குரல் கொடுக்கும் நபர்கள் நமக்கு தெரிந்துவிடும்.
    • விருந்தை புறக்கணிக்கும்போது அவர்கள் எங்களுக்கும் எதிராக திரும்பவார்கள் என்பது தெரியும்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் 10 இடங்களுக்கான மாநிலங்களை எம்.பி. தேர்தல் நடைபெற்றது. ஏழு இடங்களில் பா.ஜனதா எளிதாக வெற்றி பெறும். 3 இடங்களில் சமஜ்வாடி கட்சி வெற்றி பெறும். ஆனால் பா.ஜனதா சில எம்.எல்.ஏ.க்களை இழுத்துள்ளதாக தகவல் வெளியானது. நேற்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அளித்த விருந்தை எட்டு எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். இதனால் சமாஜ்வாடி கட்சியின் 3-வது வேட்பாளர் வெற்றி பெறுவது சந்தேகமானது.

    இந்த நிலையில்தான் இன்று காலை உத்தர பிரதேச மாநில சட்டமன்ற கொறடா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்த நிலையில் 3-வது வேட்பாளர்ரை நிறுத்தியது கட்சியில் கலகம் விளைவிப்பவர்களை அடையாளம் காண்பதற்காகத்தான் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "எங்களுடைய 3-வது இடம் பொதுவாக கட்சியில் உள்ள உண்மையானவர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனை. இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக உள்ளே எதிர் குரல் கொடுக்கும் நபர்கள் நமக்கு தெரிந்துவிடும். இது எங்களுடைய 3-வது சீட்டின் வெற்றி. கட்சியின் வெற்றி உண்மையில் உள்ளது.

    விருந்தை புறக்கணிக்கும்போது அவர்கள் எங்களுக்கும் எதிராக திரும்பவார்கள் என்பது தெரியும். அவர்களுக்கு பல்வேறு பேக்கேஜ் வழங்கப்படும் எனத் தெரிவித்து இருப்பார்கள். கலகம் விளைவித்த அவர்கள் நீக்கப்படுவார்கள்" என்றார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு 252 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சமாஜ்வாடிக்கு 108 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். பா.ஜனதா ஏழு எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். சமாஜ்வாடி 3 பேரை தேர்வு செய்ய முடியும். ஆனால் பா.ஜனதா 8-வது ஒருவரை நிறுத்தியுள்ளதால் போட்டி நிலவுகிறது.

    Next Story
    ×