என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
சுரங்கத்தில் சிக்கிய அனைவரும் நாளை அதிகாலைக்குள் மீட்கப்படுவர்: மீட்புப் படை அதிகாரி உறுதி
- உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் இன்று 11-வது நாளாக மீட்புப் பணி நடந்து வருகிறது.
- 900 மீட்டர் குழிக்குள் 800 மீட்டர் குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.
உத்தரகாசி:
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் இன்று 11-வது நாளாக மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 41 பேரில் 15 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். உத்தர பிரதேசம் (8), பீகார் (5), ஒடிசா (5), மேற்கு வங்காளம் (3), உத்தரகாண்ட் (2), அசாம் (2), இமாசல பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.
இதற்கிடையே, நுண் சுரங்கப்பாதைக்கு கிடைமட்ட துளையிடல், செங்குத்து மீட்பு சுரங்கப்பாதைக்கான கட்டுமானம் போன்ற பணிகளை மேற்கொண்டு தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கிடைமட்ட துளையிடம் மூலமாக 39 மீட்டர் குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இது 45-50 மீட்டர் செலுத்தும்வரை தொழிலாளர்களை மீட்கும் நேரத்தை சரியாக கணிக்க முடியாது என மீட்புக்குழு தெரிவித்தது. இன்று அல்லது நாளைக்குள் 41 தொழிலாளர்களையும் மீட்பதற்கான பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீட்புப் பணிகள் குறித்து அதிகாரி பாஸ்கர் குல்பே கூறியதாவது:
சுரங்கத்தில் சிக்கியவர்கள் நலமுடன் உள்ளனர். சுரங்கத்தின் மற்றொரு பக்கம் துளையிட்டு வருகிறோம். இன்றிரவு அல்லது அதிகபட்சம் நாளை அதிகாலை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்.
900 மீட்டர் குழிக்குள் 800 மீட்டர் குழாய் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. 67 மீட்டர் நீளத்தில் 39 மீட்டருக்கு தோண்டும் பணி முடிந்துள்ளது.
18 மீட்டர் மட்டுமே இன்னும் தோண்ட உள்ளதால் இன்றிரவுக்குள் மீட்புப்பணி நிறைவடையும் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் குறித்து முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமியிடம் விசாரித்து அறிந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்