என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
விந்தியகிரி போர்க்கப்பல் ஜனாதிபதி திரவுபதி முர்மு 17-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
- முதல் ஐந்து கப்பல்கள் 2019-2022-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன.
- விந்தியகிரி போர்க்கப்பல் , உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும்.
புதுடெல்லி:
இந்திய கடற்படையில் 'நீலகிரி', 'ஹிம்கிரி', 'உதய கிரி', 'துனகிரி, 'தாரகிரி' என்று பெயரிடப்பட்ட 5 போர்க்கப்பல்கள் உள்ளன. 6-வதாக விந்தியகிரி என்ற பெயரிலான போர்க்கப்பல் கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் கப்பல் கட்டும் நிலையத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த போர்க்கப்பலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 17-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் புராஜெக்ட் 17ஏ திட்டத்தின் கீழ், மும்பையை தளமாகக் கொண்ட எம்.டி.எல். நிறுவனத்தில் 4 கப்பல்களும், கொல்கத்தா ஜி.ஆர்.எஸ்.இ. நிறுவனத்தில் 3 கப்பல்களும் கட்டுமானத்தில் உள்ளன.
முதல் ஐந்து கப்பல்கள் 2019-2022-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. இந்த போர்க்கப்பல்களில் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் மற்றும் பிளாட்பார்ம் மேனேஜ்மென்ட் சிஸ்டம்கள் உள்ளன என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
"விந்தியகிரி போர்க்கப்பல் , உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும். அதே வேளையில், அதன் வளமான கடற்படை பாரம்பரியத்துக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அடையாளமாக உள்ளது" என்று கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.