என் மலர்
இந்தியா

கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய காதலன் மறுப்பு: கருவை கலைக்க சொன்னதால் கழுத்தை அறுத்து கொலை செய்த மைனர் பெண்..!
- தொடர் பழக்கத்தால் மைனர் பெண் 3 மாதம் கர்ப்பம்.
- கருவை கலைக்க சொல்லி மைனர் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததால் ஆத்திரம்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிவிட்டு, பின்னர் கருவை கலைக்க சொன்னதால் இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் அந்த மைனர் பெண்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சதாம். இவர் அபன்பூர் என்ற இடத்தில் எம்.எஸ். என்ஜினீயரிங் அதிகாரியாக வேலைப் பார்த்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் 16 வயது வயது மைனர் பெண். இவருக்கும் முகமது சதாமுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த மைனர் பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன்னதினம் (செப்டம்பர் 28ஆம் தேதி) ராய்ப்பூருக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள லாட்ஜியில் இரண்டு பேரும் தங்கியுள்ளனர். அங்கு வைத்து முகமது சதாம், இந்த மைனர் பெண்ணிடம் கருவை கலைத்துவிட வற்புறுத்தியுள்ளார். அத்துடன் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட, கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
பின்னர் சமதானம் அடைந்து தூங்க சென்றுள்ளனர். அப்போது, கருவை கலைக்க சொல்கிறாயா? என ஆத்திரமடைந்த அந்த மைனர் பெண், காதலன் மிரட்டிய அந்த கத்தியை எடுத்து, காதலின் கழுத்தை அறுத்துள்ளார். கழுத்தை அறுத்ததுடன், அவரின் செல்போனை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு ரெயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளார். ரெயில்நிலையம் அருகே லாட்ஜ் சாவியை தூக்கி எறிந்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டிற்கு வந்த மகளிடம், எங்கு சென்றாய் என தாய் கேட்க, நடந்த விசயம் அனைத்தும் தாயிடம் கூறியுள்ளார். உடனடியாக தாய், மகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடந்த அனைத்தும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விாசரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மைனர் பெண் 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். கருவை கலைக்க அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். சதாம் அவரை திருமணம் செய்ய விரும்பவில்லை, கருவை கலைத்துவிடு எனச் சொல்லியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு, கொலையில் முடிந்துள்ளது.






