என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

காவலர் நினைவு தினம் - ஒரு பார்வை

- நாம் அர்ப்பணிப்புடன் பணியாற்றினாலும் உயிருக்கு ஆபத்து என்றால் ஒதுங்கி விடுவோம்
- 1959லிருந்து காவலர் நினைவு நாள் கொண்டாடப்படுகிறது
நமது வாழ்வில் ஒரு பிரச்சனையோ, வாக்குவாதமோ அல்லது மோதலோ ஏற்படும் சூழ்நிலையில் உடனே "போலீசை கூப்பிடவா?" இல்லை "நீ போலீசுக்கு போன் பண்ணு" என சொல்வது வழக்கம்.
நாடு முழுவதும் காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு, குற்ற தடுப்பு மற்றும் குற்றம் துப்புதுலக்குதல் ஆகிய அவசியமான பணிகளில் இரவு-பகல் பாராமல் உழைத்து சமூகத்தில் அமைதியை காத்து வருகின்றனர்.
கடமையில் அர்ப்பணிப்போடு நம்மில் பெரும்பாலானோர் பணியாற்றி வந்தாலும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் என்றால் பின்வாங்குவது இயல்பு. ஆனால், ராணுவம், தீயணைப்பு மற்றும் காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்கள், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதை உணர்ந்தே அப்பணியில் இருக்கிறார்கள்.
பல காவல்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் தங்கள் பணியின் போது உயிரிழந்துள்ளனர்.
1959ல் நமது அண்டை நாடான சீனாவுடன் எல்லைப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையின் போது தங்கள் உயிரை நீத்த மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 10 அதிகாரிகளின் நினைவாக காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. வருடாவருடம் உள்ளூர் காவல், உள்நாட்டு காவல், எல்லை காவல்படை உள்ளிட்ட பல காவல் பணிகளில் உயிர் தியாகம் செய்தவர்களை போற்றும் வகையில் (அக்டோபர் 21) காவலர்கள் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில், மெரினா கடற்கரை பகுதியில் உள்ள காவல்துறை இயக்குனர் கட்டிட வளாகத்தில் "வீர வணக்க நாள்" நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
2008 மும்பை பயங்கரவாதி தாக்குதல் பேரழிவாக மாறும் முன், பயங்கரவாதியின் துப்பாக்கி குண்டை நெஞ்சில் வாங்கிக்கொண்டு, மன உறுதியுடன் வேறு எவருக்கும் தீங்கு வராமலிருக்க அவன் கையையும் துப்பாக்கியையும் கையில் பிடித்து கொண்டார், துக்காராம் ஓம்ப்லே எனும் துணை ஆய்வாளர். அந்த பயங்கரவாதியின் திட்டம் தோல்வியுற்று அவன் கைது செய்யப்பட்டான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக துக்காராம் ஓம்ப்லே உயிரிழந்தார்.
இது போல் தங்கள் உயிரை தியாகம் செய்து நாட்டு மக்களை காப்பாற்றிய காவலர்களின் உதாரணங்களை சொல்லி கொண்டே போகலாம்.
தமிழ்நாடு காவல்துறை சுமார் 150 வருட பழமையானது என்பதும், சுமார் 630 பேருக்கு ஒருவர் எனும் விகிதத்தில்தான் காவல்துறையினர் உள்ளனர் என்பதும், 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் உட்பட்ட காவல்துறையினரே சுமார் 8.5 கோடி மக்களை பாதுகாத்து சமூக அமைதியை வெற்றிகரமாக ஏற்படுத்துகின்றனர் என்பதும் தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய அம்சம்.
மேற்கத்திய நாடுகளில் உள்ள காவலர்களை போல் துப்பாக்கியை கூட பயன்படுத்தாமல், ஒரு லட்டியை மட்டுமே ஆயுதமாக கொண்டு அப்பாவி பொதுமக்களை சமூக விரோதிகளிடம் இருந்து காக்கும் காவலர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பணியின் போது உணவு, குடிநீர், குடும்ப உறுப்பினர்களின் நலம், குடும்ப நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்தையும் பொருட்படுத்தாது நேரம், காலம், வெயில், மழை என அனைத்து நேரங்களில் கடமையாற்றுவதுடன், அவசியம் ஏற்பட்டால் தங்கள் உயிரையும் கொடுக்கும் அந்த காவல்துறையினருக்கு வீர வணக்கம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
