என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக சவுதி அரேபியா செல்கிறார்
- பிரதமர் மோடி சவுதி அரேபிய இளவரசரை சந்தித்து பேச இருக்கிறார்.
- அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அடுத்த வாரம் சவுதி அரேபியா செல்கிறார். இரண்டு நாள் சுற்றுப் பயணம் வருகிற செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
எரிசக்தி, வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் வகையில் இந்த பயணம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது.
பிரதமர் மோடி- சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் சல் சவுத் இடையிலான பேச்சுவார்த்தையின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கிறது.
இந்த தகவலை வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
Next Story






