search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ.2 வரை குறைகிறது
    X

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ.2 வரை குறைகிறது

    • உக்ரைன்-ரஷியா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாயக்கு 139 டாலர் வரை உயர்ந்தது.
    • விரைவில் குஜராத், இமாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வர உள்ளது.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தை, கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    மேலும் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது.

    இந்நிலையில் உக்ரைன்-ரஷியா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாயக்கு 139 டாலர் வரை உயர்ந்தது.

    இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6-ஐ மத்திய அரசு குறைந்தது.

    அதன்பிறகு 6 மாத காலத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை.

    இந்நிலையில், தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 95 டாலர் என்ற அளவில் உள்ளது. இதனால் விரைவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    விரைவில் குஜராத், இமாச்சலபிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வர உள்ளது. எனவே அதற்கு முன்னதாக இந்த விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

    அதேநேரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையற்றதாக இருப்பதால் விலை குறைப்பு என்பது ஒரே நேரத்தில் இருக்குமா அல்லது படிப்படியாக விலை குறைக்கப்படுமா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எனவே விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×