search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாறி மாறி பதவி நீக்கம் நடவடிக்கை: வெல்லப்போவது யார்?
    X

    மாறி மாறி பதவி நீக்கம் நடவடிக்கை: வெல்லப்போவது யார்?

    • பிரபுல் பட்டேல் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கினார் சரத் யாதவ்
    • சரத் யாதவ் நியமித்த ஜெயந்த் பாட்டீலை நீக்குவதாக அஜித் பவார் குழு தகவல்

    சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி சோதனைக்குள்ளாகியுள்ளது. நேற்று முன்தினம் அவரது அண்ணன் மகன் அஜித் பவார் திடீரென் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக 9 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சரத் பவார் சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தலைமை கொறடா, பிரபுல் பட்டேல் உள்ளிட்ட முக்கியமானவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டதாக சரத் பவார் தெரிவித்தார். பிரபுல் பட்டேல் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஜித் பவார் தலைமையில் அணி, அவர்களுக்கான குழுவை கட்டமைக்க தொடங்கியுள்ளது. சொந்த குரூப், மாநில யூனிட் தலைவர்கள், சரத் பவார் ஆதரவார்களை நீக்கும் வேலையில் இறங்கியது.

    முதன்முதலாக சரத் பவார் எதிரணி குழுவின் தலைவராக அஜித் பவார் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரபுல் பட்டேல் தெரிவித்தார். அதன்பின் மாநில தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் நியமனம் செய்த ஜெயந்த் பாட்டீலை நீக்கியுள்ளது.

    குரூப் தலைவர் என்றால் கட்சியின் தேசிய தலைவர் யார்? என அஜித் பவாரிடம் கேள்வி கேட்க ''சரத் பவார் தேசிய தலைவராக இருப்பார்'' என்றார்.

    மேலும், ''கட்சியின் பெரும்பாலானோர் எடுத்த முடிவை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். அவருடைய வாழ்த்தை பெற விரும்புகிறோம்'' என பிரபுல் பட்டேல் தெரிவித்தார். தற்போதைய செயலுக்கான திட்டத்தை அஜிப் பவார் தெரிவித்துள்ளார்.

    கட்சிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் கட்சி மற்றும் சட்சி சின்னம் குறித்து முடிவு செய்யும்'' என்றார்.

    மேலும், நேற்று மகாராஷ்டிர மாநில சபாநாயகரிடம் தாங்கள் நியமனம் செய்துள்ளது, நீக்கியுள்ள விவரங்களை தெரிவித்துள்ளோம். ஏற்கனவே, தலைமை கொறடாவாக இருந்த அனில் பைதாஸ் எங்களுடைய கொறடாவாக தொடர்வார். நாங்கள் என்ன நியமனம் செய்ய வேண்டுமோ, அதை மழைக்கால சட்டசபை கூட்டத்தொடருக்கு முன் செய்வோம்'' என்றார்.

    பிரபுல் பட்டேல், சுனில் தாக்கரே, நரேந்திர ரதோட், விஜய் தேஷ்முக், சிவாஜி ராவ் கார்கே ஆகியோரை கட்சி பதவியில் இருந்து சரத் பவார் நீக்கி உத்தரவிட்டுள்ளார். பதவி ஏற்ற 9 பேருக்கு எதிராக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு எந்த மதிப்பும் இல்லை. கட்சி எங்களுடன் உள்ளது என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    எந்தவொரு கட்சியாலும் தகுதி நீக்கம், சஸ்பெண்ட் ஆகியவற்றை செய்ய இயலாது என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் கூற செய்ய அதிகாரம் இல்லை. சபாநாயகருக்குதான் அதிகாரம் உள்ளது. இது நீண்டு நடைமுறை. சபாநாயகர் அனுமதி இல்லாமல் இது நடைபெற வாய்ப்பில்லை'' என பிரபுல் பட்டேல் தெரிவித்தார்.

    சட்டசபையில் சபாநாயகர் எந்த பிரிவை தேசியவாத காங்கிரஸாக ஏற்றுக்கொள்கிறாரோ? அதுவரை பிரச்சினை பூதாகரமாக வெடிக்காது. தேர்தல் ஆணையத்தை முறையிடமாட்டார்கள் எனத் தெரிகிறது.

    Next Story
    ×