என் மலர்
இந்தியா

பாதி எரிந்த நிலையில் கல்லூரி மாணவி உடல்: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையா?
- கடந்த 14ஆம் தேதி விடுதியில் இருந்து வெளியேறியுள்ளார்.
- திரும்பி வராததால் போலீசில் புகார் அளித்த நிலையில், உடல் கண்டெடுப்பு.
அரசு கல்லூரி மாணவியன் உடல் பாதி எரிந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் அரசு கல்லூரியில் பி.ஏ. படித்து வந்த மாணவியின் உடல் தேசிய நெடுஞ்சாலையில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாணவியின் கொலைக்கு அவரது முன்னாள் காதலன் காரணமாக? என்ற கோணத்தில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மாணவி கடந்த 14ஆம் தேதி விடுதியில் விடுமுறை விண்ணப்பம் கொடுத்து விட்டு வெளியே சென்று உள்ளார். பின்னர் விடுதி திரும்பவில்லை. அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய பெற்றோருக்கு இது குறித்து தகவல் தெரிவித்து, பின்னர் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது, இந்த மாணவியின் உடல் என தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த மாணவியின் முன்னாள் காதலனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டாரா? அல்லது எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது உடல்பரிசோதனை முடிவில்தான் தெரியவரும்.






