என் மலர்tooltip icon

    இந்தியா

    அவதூறு பரப்பியவரிடம் ரூ.10 கோடி கேட்டு பலாஷ் முச்சல் வழக்கு  - ஆதவராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
    X

    அவதூறு பரப்பியவரிடம் ரூ.10 கோடி கேட்டு பலாஷ் முச்சல் வழக்கு - ஆதவராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

    • பலாஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் ஒரு அறையில் அந்தரங்கமாக இருந்தபோது பிடிபட்டார்.
    • ஆத்திரமடைந்த அங்கிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை தாக்கினர்.

    இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவ.23 திருமணம் நடைபெறவிருந்தது.

    ஆனால் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் திருமணம் கைவிடப்பட்டதாக மந்தனா அறிவித்தார்.

    பலாஷ் முச்சல்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்ததே திருமணம் கைவிடப்பட காரணம் என ஊகங்கள் எழுந்தன.

    இதற்கிடையே ஸ்மிருதியின் சிறுவயது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான விக்ஞான் மானே தேசிய ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்தார்.

    அதில் பேசிய அவர், 2025 நவம்பரில் நடந்த திருமணச் சடங்குகளின் போது நான் அங்கு தான் இருந்தேன். பலாஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் ஒரு அறையில் அந்தரங்கமாக இருந்தபோது பிடிபட்டார்.

    பலாஷின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்த அங்கிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை தாக்கினர். அவரின் மொத்த குடும்பமும் ஏமாற்றுக்காரர்கள் தான்.

    படம் எடுக்க போவதாக பலாஷ் என்னிடம் ரூ.40 லட்சம் வாங்கினார். ஆனால் திருமண முறிவிற்குப் பிறகு பலாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தைத் தராமல் என்னை ஏமாற்றினர்" என்று தெரிவித்தார்.

    இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று மறுத்த முச்சல், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு விக்ஞான் மானே மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறு வணிக ரீதியானது என்றும், திருமணத்தை கலைத்தல் போன்ற தனிப்பட்ட விஷயங்களுடன் அதை இணைப்பது பொருத்தமற்றது என்றும் கூறியது.

    விக்யானின் கருத்துக்கள் அவதூறானவை என்று கூறி, முச்சல் குறித்து பொதுவெளியில் அவர் கருத்து வெளியிட தடை விதித்தது.

    மேலும், விக்யான் தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்த நீதிமன்றம், அடுத்த விசாரணையை மார்ச் 11க்கு ஒத்திவைத்தது.

    Next Story
    ×