என் மலர்
இந்தியா
X
நீடா அம்பானியின் கைகடிகாரத்தின் விலை ரூ.1 கோடி- இதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Byமாலை மலர்27 Nov 2024 12:21 PM IST
- வானவில் வண்ண நீல மணிகளால் கற்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த கடிகாரம் செய்ய ஒரு ஆண்டு ஆகியுள்ளது.
மும்பை:
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த 2 நாட்களாக நடந்தது.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீடா அம்பானி ஏலத்தில் பங்கேற்று வீரர்களை மும்பை அணிக்கு தேர்ந்தெடுத்தார். அப்போது அவர் கையில் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரமான கைகடிகாரம் கட்டியிருந்தார். அந்த கைகடிகாரத்தின் விலை 1 கோடியே 5 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்.
ரோலக்ஸ் கம்பெனியின் அந்த கைகடிகாரம் டே-டேட் என்று அழைக்கப்படுகிறது. இந்த கைகடிகாரத்தில் 18 காரட் விலை உயர்ந்த வெள்ளை தங்கம், வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வானவில் வண்ண நீல மணிகளால் கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரம் செய்ய ஒரு ஆண்டு ஆகியுள்ளது.
ஆழ்கடலிலும் 7 மணி நேரம் இயங்கும். மொத்தத்தில் சிற்பம் போல் இந்த கை கடிகாரத்தை செதுக்கியுள்ளனர்.
Next Story
×
X