search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
    X

    டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை

    • டெல்லி மற்றும் ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை.
    • பிஷ்னோய் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரித்தபோது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியானது.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.

    பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் பிரபல தாதாக்களான நவீன் தபாஸ், சுனில் பலியான் என்ற தில்லு தாஜ்புரியா உள்ளிட்ட 6 பேரை கடந்த வாரம் என்.ஐ.ஏ. காவலில் எடுத்து விசாரணை நடத்தி இருந்தது.

    அதில் இவர்கள் சிறையில் இருந்தவாறு பல்வேறு குற்ற செயல்களை செய்தது தெரியவந்தது. இந்த கும்பலுக்கு பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி கிடைத்திருக்கலாம் எனவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கருதுகிறார்கள்.

    மேலும் பிஷ்னோய் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரித்தபோது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியானது.

    இந்த கும்பலுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் சர்வதேச பயங்கரவாத தொடர்பு பற்றிய தகவல்களும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இந்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் 20 நபர்களின் இடங்களில்தான் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.

    ஏற்கனவே இந்த வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2 கட்டங்களாக 102 இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×