என் மலர்
இந்தியா

"நேஷனல் ஹெரால்டு திருட்டு.." பிரியங்கா காந்தி ஸ்டைலில் பாராளுமன்றம் வந்த பாஜக எம்.பி
- பாஜக எம்பி பிபி சவுத்ரி தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது
- பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
ஒரே நாடு ஒரே தேர்தல்
நாடு முழுவதும் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கையின் பேரில் மசோதாவானது கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மசோதாவை ஆராய பாஜக எம்பி பிபி சவுத்ரி தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான பாராளுமன்ற கூட்டு குழுவின் (ஜேபிசி) பதவிக் காலத்தை 2025 மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கும் தீர்மானம் கடந்த மக்களவை கூட்டத்தொடரின்போது அங்கீகரிக்கப்பட்டது.
இந்நிலையில் 'ஒரே நாடு, ஒரு தேர்தல்' குறித்து விவாதிக்க பாராடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) இன்று (செவ்வாய்க்கிழமை) கூடியது.
இந்த ஜேபிசி கூட்டத்திற்கு பாஜக எம்.பி. பன்சன் ஸ்வராஜ் 'நேஷனல் ஹெரால்ட் திருட்டு' என்று எழுதப்பட்ட பையை எடுத்துச் சென்றது கவனம் பெற்றுள்ளது. முன்னதாக காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, பாலஸ்தீனம், வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் குறியீடுகள் அடங்கிய கைப்பைகளை பாராளும்னற்றத்துக்கு எடுத்துச் சென்று புதிய ட்ரெண்ட் - ஐ உருவாக்கினார்.
இதை பின்பற்றி தற்போது பையும் பாராளுமன்றம் வந்துள்ள பாஜக எம்.பி பன்சன் ஸ்வராஜ் "ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்தில் ஊழல் நடந்திருப்பது இதுவே முதல் முறை" என்று கூறினார். "அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை எடுத்துக்காட்டுகிறது" என்று விமர்சித்தார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு:
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.
2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறையினர் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.






