search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முன்னாள் சி.ஜே.ஐ. கெட்ட எண்ணம் கொண்டவர் - நீதிபதியின் பரபரப்பு குற்றச்சாட்டு
    X

    "முன்னாள் சி.ஜே.ஐ. கெட்ட எண்ணம் கொண்டவர்" - நீதிபதியின் பரபரப்பு குற்றச்சாட்டு

    • 1984ல் ம.பி. உறுப்பினராக பதிவு செய்து கொண்டார் ப்ரிதிங்கர் திவாகர்
    • அதிர்ஷ்டவசமாக எனக்கு சாபமே வரமானது என்றார் திவாகர்

    உத்தர பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்றம், பிரயாக்ராஜ் (முன்னர் அலகாபாத்) நகரில் உள்ளது.

    இங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் ப்ரிதிங்கர் திவாகர் (Pritinker Diwaker).

    திவாகர், கடந்த 1984ல் மத்திய பிரதேச பார் கவுன்சில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டவர். பிறகு 2005 ஜனவரி மாதம் சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரானார். கடந்த 2009ல் சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 2018 அக்டோபர் மாதம் பிரயாக்ராஜ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். 2023 அன்று தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

    கடந்த மார்ச் 26 அன்று பிரயாக்ராஜ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனமானார்.

    பிரயாக்ராஜ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ப்ரிதிங்கர் திவாகரின் பணிக்காலம் முடிவடைந்து அவர் விடைபெற்று செல்வதால், நேற்று அவருக்கு விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

    அப்போது பேசிய அவர் தெரிவித்ததாவது:

    இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியம், என்னை துன்புறுத்துவதற்காகவே பிரயாக்ராஜ் நீதிமன்றத்திற்கு மாற்றல் வழங்கியது. அது ஒரு கெட்ட நோக்கத்தில் வழங்கப்பட்ட பணி மாறுதல். ஆனால், அதிர்ஷ்டவசமாக, சாபமே வரமானது போல் எனக்கு மிகவும் உற்சாகமான வரவேற்பும், சக பணியாளர்களின் ஒத்துழைப்பும், பார் கவுன்சில் உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தது. எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை தற்போதைய இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சரி செய்தார். அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவில் உயர் நீதிமன்ற மட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் அமைப்பே முடிவுகளை எடுக்கும் இறுதி அதிகாரம் கொண்டது. இந்த அமைப்பில் முழுவதும் நீதிபதிகளே உள்ளதால், "நீதிபதிகளை நீதிபதிகளே நியமிப்பது" எனும் வழிமுறை சரியல்ல என பலர் விமர்சித்து வந்தனர்.

    இந்நிலையில், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் அமைப்பின் நியமன முடிவை ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியே விமர்சித்திருப்பதற்கு சட்ட நிபுணர்கள் சமூக வலைதளங்களில் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×