என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரபிரதேசத்தில் மேயருக்கு 20 ஆயிரம் பெண்கள் ராக்கி கட்டி சாதனை
    X

    உத்தரபிரதேசத்தில் மேயருக்கு 20 ஆயிரம் பெண்கள் ராக்கி கட்டி சாதனை

    • கடந்த 3 நாட்களில், 20,000 பெண்கள் ராக்கி கட்டியுள்ளனர்.
    • மேயர் உமேஷ் கவுதம் அதிக ராக்கி கட்டியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    பரேலி:

    உத்தரபிரதேச மாநிலம், பரேலி மாநகராட்சி மேயர் டாக்டர் உமேஷ் கவுதம். இவருக்கு ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் ராக்கி கட்டினர். கடந்த 3 நாட்களாக, நகரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து பெண்கள் அவருக்கு ராக்கி கட்ட வந்தனர்.

    கடந்த 3 நாட்களில், 20,000 பெண்கள் ராக்கி கட்டியுள்ளனர். இதன் மூலம் மேயர் உமேஷ் கவுதம் அதிக ராக்கி கட்டியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். ராக்கி கட்டிய பெண்களுக்கு பரிசு தருவதாக அவர் உறுதியளித்தார்.

    தனது சகோதரிகளின் நலன் தனது கடமை என்று அவர் கூறினார். ராக்கி கட்டும்போது, சகோதரர்கள் இல்லாத சில பெண்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.

    உமேஷை தங்கள் சொந்த சகோதரனாகக் கருதுவதாக அவர்கள் கூறினர். இதனால் உமேஷும் உணர்ச்சிவசப்பட்டார். அவரது கண்கள் ஆனந்த கண்ணீரில் நனைந்தன.

    Next Story
    ×