என் மலர்
இந்தியா

காதலியுடன் ஷாப்பிங் செய்த கணவனை புரட்டி எடுத்த மனைவி- பாலிவுட் பாணியில் நடந்த பரபரப்பு
- சண்டை காரணமாக மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோருடன் தங்கியிருந்தார்.
- தனது கணவரை வேறொரு பெண்ணுடன் பார்த்ததும் ஆத்திரத்தில் அடித்து உதைத்துள்ளார்
புதுடெல்லி:
திரைப்படங்களில் வரும் காட்சி போன்று பெண் ஒருவர், காதலியுடன் ஷாப்பிங் செய்த கணவரை, பொதுமக்கள் முன்னிலையில் புரட்டி எடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது. டெல்லியில் எப்போதும் பிசியாக காணப்படும் காசியாபாத் மார்க்கெட்டில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
கர்வா சாத் பண்டிகையை முன்னிட்டு அந்த நபர், தன் மனைவிக்கு தெரியாமல் தோழியுடன் காசியாபாத் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மனைவி மற்றும் அவரது தோழிகள், சுற்றி வளைத்து இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இதுதொடர்பாக அந்த நபரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டை காரணமாக, மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோருடன் தங்கியிருந்தார். தன் தாயாருடன் ஷாப்பிங் செய்ய வந்திருந்தபோது, தனது கணவரை வேறொரு பெண்ணுடன் பார்த்ததும் ஆத்திரத்தில் அடித்து உதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்வா சாத் என்பது வடமாநிலங்களில் கொண்டாடப்படும் இந்து பண்டிகையாகும். இந்த நாளில், திருமணமான பெண்கள் விரதம் இருந்து தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வது வழக்கம்.






