என் மலர்
இந்தியா

மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் - பேஸ்மேக்கர் அறுவை சிகிச்சை வெற்றி
- சோர்வு மற்றும் சுவாசப் பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்த அறிவுறுத்தினர்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (83 வயது) சோர்வு மற்றும் சுவாசப் பிரச்சனைகள் காரணமாக இந்த வார தொடக்கத்தில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதால், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்த அறிவுறுத்தினர்.
இந்நிலையில் கார்கேவுக்கு நேற்றுமேற்கொள்ளப்பட்ட பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் தனது பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
Next Story






