என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரபிரதேசத்தில் மகா மேளா: 32 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்
    X

    உத்தரபிரதேசத்தில் மகா மேளா: 32 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

    • 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • பிப்ரவரி 18-ந்தேதி மகா மேளா நிறைவடைகிறது.

    பிரயாக்ராஜ் :

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா மேளா நடந்து வருகிறது. இதன் 4-வது புனித நீராடல் திருவிழா, வசந்த பஞ்சமியையொட்டி நேற்று நடந்தது. கல்விக் கடவுளான சரஸ்வதி, இந்த நாளில் பிறந்ததாக கருதப்படுகிறது.

    நேற்று காலை 4 மணி முதல் மாலை 4 மணிவரை பிரயாக்ராஜில் கங்கையிலும், 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும் 32 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டிரோன்கள் உதவியுடன் கண்காணிப்பு பணி நடந்தது.

    பிப்ரவரி 18-ந் தேதி மகா சிவராத்திரி புனித நீராடலுடன் மகா மேளா நிறைவடைகிறது.

    Next Story
    ×