என் மலர்

    இந்தியா

    அரசியல் சாசனம் குறித்து சர்ச்சை பேச்சு - கேரள மந்திரி சஜி செரியன் திடீர் ராஜினாமா
    X

    சஜி செரியன்

    அரசியல் சாசனம் குறித்து சர்ச்சை பேச்சு - கேரள மந்திரி சஜி செரியன் திடீர் ராஜினாமா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கேரள அமைச்சரவையில் இருந்து மந்திரி சஜி செரியன் ராஜினாமா செய்தார்.
    • சஜி செரியன் ராஜினாமா செய்தது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி என்ற இடத்தில் ஆளும் சி.பி.எம். கட்சி சார்பில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில மந்திரி சஜி செரியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அழகான அரசியல் சாசனத்தை நாம் கொண்டிருக்கிறோம் என அடிக்கடி கூறுகிறோம். ஆனால், பிரிட்டிஷ் முறையை கண்மூடித்தனமாக நகலெடுத்து உருவாக்கப்பட்டதுதான் நமது அரசியல் சாசனம் என குறிப்பிட்டார்.

    இதையடுத்து, அரசியல் அமைப்பு சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மீன்வளத்துறை மந்திரியாக இருந்த சஜி செரியன் பேச்சை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

    இந்நிலையில், கேரள அமைச்சரவையில் இருந்து மந்திரி சஜி செரியன் ராஜினாமா செய்தார். பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என கூறிய நிலையில் சஜி செரியன் ராஜினாமா செய்தது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட முடிவின் காரணமாக பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்திய அரசியல் சாசனத்திற்கு ஒருபோதும் களங்கம் ஏற்படுத்தவில்லை. பேச்சின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு எனக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். இது சி.பி.எம். கட்சியையும் இடது முன்னணியையும் பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டது என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×