என் மலர்tooltip icon

    இந்தியா

    காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ந்தேதி தொடங்குகிறது: தர்மேந்திர பிரதான் தகவல்
    X

    காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ந்தேதி தொடங்குகிறது: தர்மேந்திர பிரதான் தகவல்

    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 1400 பேர் காசிக்கு அழைத்து செல்லப்படுவார்கள்
    • காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

    புதுடெல்லி:

    மத்திய-மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு - காசி கலாச்சார தொடர்பை வலுப்படுத்த கொண்டாடப்படும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி டிசம்பர் 2-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 1400 பேர் காசிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், பெண்கள், எழுத்தாளர், தொழில் வல்லுனர்கள், கைவினைஞர்கள், ஆன்மீக அறிஞர்கள் உள்ளிட்டோரை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

    Next Story
    ×