என் மலர்tooltip icon

    இந்தியா

    சட்டசபை தேர்தலில் முதியோர், வீட்டில் இருந்து வாக்களிப்பது இன்றுடன் நிறைவு
    X

    சட்டசபை தேர்தலில் முதியோர், வீட்டில் இருந்து வாக்களிப்பது இன்றுடன் நிறைவு

    • இதுவரை 92.12 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது.
    • வீட்டில் இருந்து வாக்களிக்க விண்ணப்பித்த 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் இறந்துள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் 80 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து, வீட்டில் இருந்தவாறு வாக்களிக்க 99 ஆயிரத்து 529 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, கடந்த மாதம் (ஏப்ரல்) 29-ந் தேதியில் இருந்து வீட்டில் இருந்தே மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் வாக்களித்து வருகிறார்கள். நேற்றும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டில் இருந்தபடியே வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களித்தனர். கர்நாடகத்தில் நேற்று வரை ஆயிரத்து 386 பேர் வாக்களித்துள்ளனர். இதன்மூலம் வீட்டில் இருந்தவாறு இந்த சட்டசபை தேர்தலில் 92.12 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது.

    வயதானவர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும். இன்று நூறு சதவீத ஓட்டுகள் பதிவாகும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்து வாக்களிக்க விண்ணப்பித்த 100-க்கும் மேற்பட்ட முதியவர்கள் இறந்துள்ளனர். சில வயதானவர்கள் வாக்களித்து விட்டு உயிர் இழக்கும் சம்பவங்களும் நடக்கிறது. அதன்படி, உடுப்பி மாவட்டத்தில் வீட்டில் இருந்து வாக்களித்திருந்த 2 முதியவர்கள் உயிர் இழந்துள்ளனர். உடுப்பி மாவட்டம் பாண்டேஷ்வரா கிராமத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணா (வயது 84), ஓய்வு பெற்ற ஆசிரியர் குருராஜா பட் (94) ஆகிய 2 பேரும் ஜனநாயக கடமைாற்றிவிட்டு உயிர் இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×