என் மலர்
இந்தியா

காது குத்துவதற்காக மயக்க ஊசி- 6 மாத குழந்தை உயிரிழப்பு
- காதுகளில் துளையிட வேண்டி டாக்டர்கள், குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள ஹங்கலா கிராமத்தை சேர்ந்த ஆனந்த் - சுபமானசா தம்பதியின் 6 மாத குழந்தை பிரக்யாத். தங்களது குழந்தைக்கு காது குத்துவதற்காக பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
இதையடுத்து காதுகளில் துளையிட வேண்டி டாக்டர்கள், குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்தனர். மயக்க மருந்து கொடுத்த சிறிது நேரத்திலே குழந்தைக்கு வலிப்பு வர தொடங்கியது. இதனால் டாக்டரின் ஆலோசனையின் பேரில் உடனடியாக குழந்தையை குண்டலுபேட்டை தாலுகா அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
ஆனால் அவர்கள் மருத்துவமனைக்கு சென்றடைவதற்குள் குழந்தை சுய நினைவை இழந்து இறந்துவிட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






