search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    3வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி
    X

    3வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி

    • 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • உற்பத்தி துறையின் மோசமான செயல்பாடு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நடப்பு நிதியாண்டின் (2022-2023) அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

    உற்பத்தி துறையின் மோசமான செயல்பாடு காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 11.2 சதவீதமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என தனது சமீபத்திய கணிப்பில் தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது. இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதத்தில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 முக்கிய துறைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இது 7.8 சதவீதம் அதிகம் ஆகும். இத்தகவலை மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது

    Next Story
    ×