என் மலர்
இந்தியா

தெஹ்ரானில் பெரும்பாலான இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்..!
- ஈரானில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தவித்து வருகிறார்கள்.
- தெஹ்ரானில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. 4-வது நாளாக இன்றும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்துவதால் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் தலைநகர தெஹ்ரானில் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
தெஹ்ரானில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களை இந்திய தூதரகம் தெஹ்ரானில் இருந்து வேறு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு போக்குவரத்து, உணவு தங்கும் வசதி உருவாக்கி கொடுக்கப்பட்டள்ளது. மிகவும் குறைந்த அளவிலான மாணவர்களே மட்டுமே தூதரக வாய்ப்பை பயன்பெற முடியாமல் உள்ளனர் என்று தெரிவித்தள்ளது.
ஈரானில் உள்ள மற்ற மாணவர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே அறிவித்த பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முடிந்த அளவிற்கு வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்னர். ஜன்னல் அருகே இருப்பதை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியர்கள் எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாக இருக்கவும், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் புதிதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் சுமார் 9 ஆயிரம் இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்போது எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற சரியான எண்ணிக்கை தெரியவில்லை.






