என் மலர்tooltip icon

    இந்தியா

    உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடு: ஜப்பானை பின்னுக்குத் தள்ளியது இந்தியா
    X

    உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடு: ஜப்பானை பின்னுக்குத் தள்ளியது இந்தியா

    • 2025-26 நிதியாண்டின் 2-வது நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர்.
    • இதன் மூலம் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. 2030-க்குள் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளும் எனவும் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து சிறந்த வளர்ச்சி எண்ணிக்கையால், இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதார நாடாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. 2025-26 நிதியாண்டின் 2-வது காலாண்டில் இந்தியாவின் உண்மையான உள்ளாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதமாகும். முதல் காலாண்டில் 7.4 சதவீதமாக இருந்த நிலையில், 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    அமெரிக்கா உலகின் முதல் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. சீனா 2-ஆவது இடத்தில் உள்ளது. 2026-ல் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. ஐஎம்எஃப் 2025-ல் 6.6 சதவீதமாகும், 2026-ல் 6.2 சதவீதமாக இருக்கும் என கணித்தள்ளது.

    Next Story
    ×