என் மலர்tooltip icon

    இந்தியா

    குண்டு பசங்க பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியா: ஜாக்கிரதையா சாப்பிடுங்க- எச்சரிக்கை
    X

    குண்டு பசங்க பட்டியலில் 3-வது இடத்தில் இந்தியா: ஜாக்கிரதையா சாப்பிடுங்க- எச்சரிக்கை

    • ஐடி ஊழியர்களில் பெரும் சதவீதம் பேர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
    • சிறு வயதிலிருந்தே சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள்.

    இந்தியாவில் அதிக எடை கொண்ட உடல் குண்டானவர்கள் எண்ணிக்கை 2050 -ம் ஆண்டுக்குள் 450 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்போது 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் பெரும்பாலோர் அதிக எடை கொண்டவர்களாகக் இருக்க வாய்ப்புள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

    5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கூட பெரும்பான்மையானவர்கள் குண்டாக இருப்பவர்கள். சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உடல் பருமனில் இந்தியா தற்போது உலகில் 3-வது இடத்தில் உள்ளது.

    சில ஆண்டுகளில் இந்தியா அமெரிக்காவைக் கூட விஞ்சி, உலகின் 2-வது அதிக உடல் பருமன் கொண்ட நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    ஐடி ஊழியர்களில் பெரும் சதவீதம் பேர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்தப் பிரச்சனை நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

    அதிக எடை கொண்டவர்களுக்கு வேறு பல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. வகை 2 நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம். இதய நோய்கள், கொழுப்பு கல்லீரல், மன நோய்கள், பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.

    உணவு உட்கொள்ளும் போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    உடல் பருமனுக்கு முக்கிய சிகிச்சை கவனத்துடன் சாப்பிடுவதுதான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும். உணவு நேரம் என்பதால் திடீரென சாப்பிடுவது எடை அதிகரிக்க வழிவகுக்கும். சீரான உணவு வழக்கமான உடற்பயிற்சி, உடல் செயல்பாடு ஆரோக்கியமான வாழ்க்கை முறை, போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பது ஆகியவற்றுடன் உடல் பருமனிலிருந்து விடுபட உதவும்.

    பதப்படுத்தப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளில் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் என்று உலக உடல் பருமன் கூட்டமைப்பு கூறுகிறது.

    சிறு வயதிலிருந்தே சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தாதீர்கள்.

    காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுங்கள். உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடு ஒவ்வொரு நாளும் அவசியம்.

    குழந்தைகள் அதிகமாக மொபைல் போன்கள் மற்றும் டிவிகளைப் பயன்படுத்துவதும் மைதானத்தில் விளையாடுவது குறைவதும் உடல் பருமனுக்குக் காரணமாகின்றன என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×