என் மலர்
இந்தியா

சரிவை சந்தித்த இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு
- முந்தைய வாரத்தின் அறிக்கையின்படி 4.307 பில்லியன் டாலர் அதிகரித்து 655.817 பில்லியனாக இருந்தது.
- தங்கம் கையிருப்பு 1.015 பில்லியன் அமெரிக்க டாலர் குறைந்து 55.967 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
ஜூன் மாதம் 14-ந்தேதி வார முடிவின்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 2.922 பில்லியன் டாலர் குறைந்து 652.895 பில்லியன் டாலராக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தின் அறிக்கையின்படி 4.307 பில்லியன் டாலர் அதிகரித்து 655.817 பில்லியனாக இருந்தது. கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இது புதிய உச்சத்தை தொட்டதாக இருந்தது.
தங்கம் கையிருப்பு 1.015 பில்லியன் அமெரிக்க டாலர் குறைந்து 55.967 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
எஸ்.டி.ஆர்.எஸ். (Special Drawing Rights) 54 மில்லியன் அமெரிக்க டாலர் குறைந்து 18.107 பில்லியன் டாலராக உள்ளது.
IMF உடனான இந்தியாவின் கையிருப்பு 245 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 4.581 பில்லியன் டாலராக உள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
Next Story






