search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா சாதனை-  மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டு
    X

    (கோப்பு படம்)

    குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைப்பதில் இந்தியா சாதனை- மந்திரி மன்சுக் மாண்டவியா பாராட்டு

    • சுகாதாரப் பணியாளர்களுக்கு மத்திய மந்திரி நன்றி தெரிவித்துள்ளார்.
    • அனைவருக்கும் ஆரோக்கிய திட்ட பயனாளிகளுக்கு சுகாதார அட்டை வழங்கப்படும்.

    2014-ஆம் ஆண்டு முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் நாடு முழுவதும் குறைந்துள்ளதாக இந்திய மாதிரி பதிவு அமைப்பு வெளியிட்ட புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக அளவில் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா ஒரு முக்கிய சாதனையைப் படைத்துள்ளதாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராடடு தெரிவித்துள்ளார்.

    மேலும் குழந்தை இறப்பை குறைப்பதற்கு அயராது உழைத்த அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.


    முன்னதாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் 4 வது ஆண்டு விழாவில் பயனாளிகளுடன் உரையாடிய மன்சுக் மாண்டவியா, அனைவருக்கும் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் மத்திய அரசின் நோக்கத்தை இந்த திட்டம் வலுப்படுத்தியுள்ளது என்றார்.

    ஏழை மக்களும் சுகாதார சேவையை பெறும் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சேராத மாநிலங்களும் சேருமாறு அவர் வலியுறுத்தினார். ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கும் விரைவில் முத்திரையுடன் கூடிய அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×