என் மலர்tooltip icon

    இந்தியா

    எனக்கு எந்த அவசரமும் இல்லை: முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு டி.கே. சிவக்குமார் பதில்
    X

    எனக்கு எந்த அவசரமும் இல்லை: முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு டி.கே. சிவக்குமார் பதில்

    • டி.கே. சிவக்குமார் இரண்டரை ஆண்டுகள் முதல்வராக பதவி ஏற்பார் என்ற பேச்சு வலுவடைந்து வருகிறது.
    • ஆனால், டி.கே. சிவக்குமார் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். அடுத்த மாதத்துடன சித்தராமையாவின் முதல்வர் பதவிக்காலம் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைகிறது.

    இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமாரும் முதல்வராக இருப்பார்கள். இது தேர்தலின்போது எடுக்கப்பட்ட முடிவு என்ற தகவல் உலா வருகிறது.

    இதனால், நீங்கள் எப்போது முதல்வர் ஆவீர்கள் என டி.கே. சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், சிவக்குமார் ஆதரவாளர்கள் சில, முதல்வராகுவதற்கான நேரம் நெருங்கி விட்டது எனத் தெரிவித்து வருகின்றனர்.

    சில மீடியாக்கள் முதல்வராகும் நேரம் நெருங்கிவிட்டதாக டி.கே. சிவக்குமார் கூறியதாக செய்திகள் வெளியிடுகின்றன.

    இந்த நிலையில் லாக் பாக்கில் மக்களை சந்தித்து அவர்களுடன் டி.கே. சிவக்குமார் உரையாடினார். அப்போது அவரிடம், இந்த வருடம் இறுதியில் முதல்வர் பதவி மாற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு டி.கே. சிவக்குமார் பதில் அளித்து கூறியதாவது:-

    நான் முதல்வராக வேண்டும் என்று சிலர், தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதற்கான நேரம் நெருங்கிவிட்டதா என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள், அவ்வளவுதான். இதை திரித்து கூற வேண்டாம். முதல்வராகும் நேரம் நெருங்கிவிட்டதாக நான் கூறியதாக மீடியாக்களில் காண்பிக்கப்பட்டுள்ளது. சில மீடியாக்கள் ஏற்கனவே அவ்வாறு காண்பித்துள்ளன. எனக்கு எந்த அவசரமும் இல்லை.

    நீங்கள் பொய்யான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான செய்திகளை உருவாக்கினால், எதிர்காலத்தில் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டேன். எந்த பேட்டியும் கொடுக்கமாட்டேன். அழைக்கவும் மாட்டேன். மீடியாக்களை அழைக்காமல் எப்படி அரசியல் செய்ய முடியும் என எனக்குத் தெரியும்.

    நேரம் நெருங்கிவிட்டதாக நான் கூறியதாக மீடியாக்களில் போட்டது யார்? நான் அவ்வாறு எங்கே சொன்னேன்? நான் அப்படி எங்கேயாவது சொல்லி உள்ளேனா? யாரோ சிலர் அது பற்றி பேசும்போது, நான் அமைதியாக இருக்கிறேன். அதுப்பற்றி விவாதிக்கக் கூடாது.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

    Next Story
    ×