என் மலர்
இந்தியா

கடும் விமர்சனம் எதிரொலி: மினிமம் பேலன்ஸை குறைத்தது ஐசிஐசிஐ வங்கி
- நகர்ப்புற பகுதி புதிய வாடிக்கையாளர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது.
- கடும் விமர்சனம் எழும்ப தற்போது, குறைத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் புதிதாக வங்கி கணக்கு தொடங்க மினிமல் பேலன்ஸ் 50 ஆயிரம் ரூபாய் என அதிரடியாக உயர்த்தியது. இது வாடிக்கையாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி மினிமம் பேலன்ஸ்-ஐ தற்போது குறைத்துள்ளது. நகர்ப்புறத்தில் 50 ஆயிரம் ரூபாய் என்பதை 15 ஆயிரமாக குறைத்துள்ளது.
Semi-Urban மற்றும் கிராமப்புற பகுதிகளில் 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்திய நிலையில், தற்போது 7500 ரூபாயாக குறைத்துள்ளது. பழைய வாடிக்கையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் என்பதை அப்படியே உள்ளது.
பெரும்பாலான வங்கிகள் 2 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மினிமம் பேலன்ஸ் ஆக வைத்துள்ளது.
Next Story






