என் மலர்tooltip icon

    இந்தியா

    நான் எந்த புரட்சியிலும் ஈடுபட தேவையில்லை: டி.கே. சிவக்குமார்
    X

    நான் எந்த புரட்சியிலும் ஈடுபட தேவையில்லை: டி.கே. சிவக்குமார்

    • எனக்கானது எதுவாக இருந்தாலும், சரியான நேரத்தில் வந்து சேரும் என்பதை நான் எப்போதும் நம்புகிறவன்.
    • அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் என்னை நம்புகிறேன்.

    கர்நாடக முதலமைச்சர் பதவி தொடர்பாக விசயம் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், நான் எந்த புரட்சியிலும் ஈடுபட தேவையில்லை என்று டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-

    இந்த நாள் வரைக்கும், நான் முதல்வர் பதவி விவகாரம் தொடர்பாக பேசியது கிடையாது. இது எனக்கும், முதல்வருக்கும், கட்சி உயர் மட்டத்திற்கும் இடையிலானது. கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று மட்டுமே சொல்லியுள்ளேன். மற்றபடி நான் ஏதும் பேசவில்லை.

    கட்சியின் தலைவராக இருந்து, இந்த நாற்காலியில் அமர்ந்திருக்கும் நான், இந்த நிலையில் இருந்து அநீதி இழைத்துவிட்டேன், கட்சியைக் கொன்றுவிட்டேன் என்று யாரும் என்னிடம் சுட்டிக்காட்டக்கூடாது. எதிர்காலத்தில் யாரும் எனக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களை அனுப்புவதை நான் விரும்பவில்லை. எனவே, நான் மிகுந்த பொறுமையுடன் இருக்கிறேன். என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியும், அது சரியா தவறா என்று எனக்கு அது தெரியும்.

    அவர்கள் (கட்சி தொண்டர்கள்) எங்களை அதிகாரத்தில் அமர வைத்துள்ளனர். எனது சுயநலத்திற்காக எந்தவிதமான மிரட்டலில் ஈடுபடுவதிலும், கட்சிக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுத்துவதிலும் நான் ஆர்வமாக இல்லை.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

    பட்ஜெட்டிக்குப் பிறகு சில புரட்சிகள் நடக்குமா? என்ற கேள்விக்கு "நான் எந்தவொரு புரட்சியிலும் ஈடுபட தேவையில்லை. நான் என்னை நம்புகிறேன். என் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. தன்னம்பிக்கை உள்ளது. நான் எந்தவொரு முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. எனக்கானது எதுவாக இருந்தாலும், சரியான நேரத்தில் வந்து சேரும் என்பதை நான் எப்போதும் நம்புகிறவன். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. நாங்கள் உங்களை விரைவில் சந்திப்பேன்" என்றார்.

    Next Story
    ×