என் மலர்
இந்தியா

6-க்குப் பதில் 4 பானி பூரி: சாலையில் அமர்ந்து நீதி கேட்ட பெண்..! வீடியோ
- 20 ரூபாய்க்கு கடைக்காரர் 4 பானி பூரி வழங்கியதால் பெண் ஒருவர் விரக்தி.
- 6 வழங்க வேண்டும் என சாலையில் அமர்ந்து போராட்டம்.
வெற்றி ஊர்வலம், அரசியல் பேரணி போன்றவற்றால் சாலையில் போக்குவரத்து நெரிசல், தடை ஏற்படுவதை பார்த்திக்கிறோம். ஆனால், குஜராத் மாநிலம் வதோதராவில் இரண்டு பானி பூரிக்காக பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுர்சாகர் லேக் பகுதியில், சாலையோர கடையில் பெண் ஒருவர் பானி பூரி சாப்பிட சென்றுள்ளார். அப்போது கடைக்காரரிடம் 20 ரூபாய் கொடுத்து பானி பூரி கேட்டுள்ளார். 20 ரூபாய்க்கு 6 பானி பூரி எனக் கடைக்காரர் கூறிவிட்டு, 4 பானி பூரிதான் கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால், அந்த பெண் தனக்கு கூடுதலாக 2 பானி பூரி வேண்டும் என அடம் பிடித்துள்ளார். ஆனால், கடைக்காரர் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால், கடைக்காரரிடம் இருந்து மேலும் 2 பானிபூரி கிடைக்காதது அவரை சங்கடத்தில் ஆழ்த்தியது.
கடைக்காரரிடம் இருந்து தனக்கு நீதி வேண்டும் என நடுசாலையில அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. டூவிலர், காரில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்தி விசாரிக்க தொடங்கினர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, அவர்கள் அந்த பெண்ணை நடுரோட்டில் இருந்து அப்புறப்படுத்தினர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தும்போது, 20 ரூபாய்க்கு 6 பானிபூரி என்ற நியாயமான வர்த்தகத்தை அமல்படுத்த வேண்டும். அதைவிட ஒன்னுக்கூட குறையக்கூடாது" எனக் கண்ணீர் விட்டு தனது ஆதங்களை வெளிப்படுத்தினார்.






