என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் ரூ.39,577 கோடி GST வரி ஏய்ப்பு முறைகேடு - நிர்மலா சீதாராமன் தகவல்
    X

    கர்நாடகாவில் ரூ.39,577 கோடி GST வரி ஏய்ப்பு முறைகேடு - நிர்மலா சீதாராமன் தகவல்

    • 2023-24 நிதியாண்டில் ரூ. 7,202 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.
    • அதேபோல் 2022-23 நிதியாண்டில் ரூ. 25,839 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது.

    கர்நாடகாவில் 2024-25 நிதியாண்டில், ரூ. 39,577 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமான அளித்த பதிலில் இதை தெரிவித்துள்ளார்.

    2024-25 நிதியாண்டில் வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக மொத்தம் 1,254 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    2023-24 நிதியாண்டில் ரூ. 7,202 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 925 வழக்குகள் பதிவாகியுள்ளன. எனவே 2024-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ஆம் நிதியாண்டில் வரி ஏய்ப்பு 5 மடங்கு அதிகரித்துள்ளது.

    அதேபோல் 2022-23 நிதியாண்டில் ரூ. 25,839 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது.

    Next Story
    ×