என் மலர்
இந்தியா

கூகுள், ஆப்பிள் நிறுவன பயனர்களின் 18.4 கோடி தரவுகள் திருட்டு - சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தகவல்
- தனிப்பட்ட சாதனங்களை பாதித்து, பாதுகாக்கப்பட்ட மின்னஞ்சல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- தனிப்பட்ட சாதனங்களை பாதித்து, பாதுகாக்கப்பட்ட மின்னஞ்சல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
ஆப்பிள், கூகுள், பேஸ்புக், மைக்ரோ சாப்ட் உள்ளிட்ட முக்கிய தொழில் நுட்ப தளங்களுடன் இணைக்கப்பட்ட 18.4 கோடிக்கும் அதிகமான கடவு சொற்கள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூறி உள்ளனர்.
இதுதொடர்பாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான பவுலர் நடத்திய ஆய்வில் இன்போஸ்டீலிங் மால்வர் வகை மென்பொருளை பயன்படுத்தி பயனர்களின் பெயர்கள், கடவு சொற்கள், கிரெடிட், டெபிட் கார்டு விபரங்கள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. லம்மாஸ்டீலர் போன்ற மால்வர்களை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்யப்பட்ட வலை தளங்கள் மற்றும் அமைப்புகளில் இருந்து பயனர்களின் பெயர்கள், கடவு சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை திருடி டார்க் வெப்பில் விற்பனை செய்கின்றனர். இத்தகைய தனிப்பட்ட சாதனங்களை பாதித்து, பாதுகாக்கப்பட்ட மின்னஞ்சல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட தரவு சேமிப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. உடனடியாக அனைத்து தளங்களும் உச்சக்கட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தகவல்கள் கசிந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தகவல்கள் கசிந்தது உண்மையானால் சமூக வலைதளங்களில் தரவுகள் வங்கி கணக்குகளின் தரவுகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






