என் மலர்

  இந்தியா

  மத்திய பிரதேசத்தில் சரக்கு ரெயில்கள் மோதல்- என்ஜின் தீப்பிடித்தது
  X

  மத்திய பிரதேசத்தில் சரக்கு ரெயில்கள் மோதல்- என்ஜின் தீப்பிடித்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரெயில்வே ஊழியர்கள் மீட்பு பணிக்காக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
  • பிலாஸ்பூர் மற்றும் கத்னி வழியே செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.

  மத்திய பிரதேசத்தின் ஷாதூல் நகரில் சிங்பூர் ரெயில் நிலையம் அருகே 2 சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் இன்று மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் ஒரு ரெயிலின் என்ஜின் மற்றொரு ரெயிலின் மீது ஏறியது. இந்த சம்பவத்தில் ஒரு எஞ்சின் தீப்பிடித்து எரிந்தது.

  ரெயில் விபத்தில் இரு ரெயில்களின் ஓட்டுநர்களும் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 2 ரெயில்வே பணியாளர்கள் விபத்தில் சிக்கி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

  இதுபற்றி தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் மீட்பு பணிக்காக சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். இந்த விபத்து காரணமாக பிலாஸ்பூர் மற்றும் கத்னி வழியே செல்லும் ரெயில் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது.

  விபத்து பற்றி தகவல் அறிந்த ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை முடுக்கி விட்டனர்.

  Next Story
  ×