என் மலர்
இந்தியா

இந்தியாவின் 2023-24 நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சி 8.2 சதவீதம்
- 2022-23 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 6.2 சதவீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தி இருந்தது.
- 2022-23 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் இருந்த நிலையில், தற்போது 2023-24 நிதியாண்டில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என தேசிய புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஆண்டு பொருளாதார வரள்ச்சி 8.2 சதவீதமாக உள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 8.6 ஆக இருந்த நிலையில் கடைசி காலாண்டின் வளர்ச்சி .4 சதவீதம் குறைந்துள்ளது.
2022-23 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 6.2 சதவீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தி இருந்தது. தற்போது 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் இருந்த நிலையில், தற்போது 2023-24 நிதியாண்டில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் 5.3 சதவீதம என்பது குறிப்பிடத்தக்கது.






