என் மலர்tooltip icon

    இந்தியா

    ககன்யான் விண்வெளிப் பயணம்: பாராசூட் சோதனை வெற்றி - புது மைல்கலை எட்டிய இஸ்ரோ
    X

    ககன்யான் விண்வெளிப் பயணம்: பாராசூட் சோதனை வெற்றி - புது மைல்கலை எட்டிய இஸ்ரோ

    • ககன்யான் பயணத்திற்கு இந்த சோதனை மிகவும் முக்கியமானது.
    • இந்திய விமானப்படை, DRDO, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இந்த சோதனையில் இஸ்ரோவுடன் இணைந்து பங்கேற்றன.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ககன்யான் பயணத்தை நோக்கி மற்றொரு முக்கிய மைல்கல்லைக் கடந்துள்ளது.

    விண்வெளிப் பயணத்தின் போது விண்வெளி வீரர்களின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமான பாராசூட் அமைப்பின் செயல்திறனை சோதிக்க நடத்தப்பட்ட "ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் (IADT-01)" வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    ககன்யான் பயணத்திற்கு இந்த சோதனை மிகவும் முக்கியமானது விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது விண்வெளிவீரர் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், அதைப் பாதுகாப்பாக தரையிறக்கவும் இந்த பாராசூட் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று நடந்த சோதனையில் இந்த பாராசூட் அமைப்பின் செயல்திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    இந்திய விமானப்படை, DRDO, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை இந்த சோதனையில் இஸ்ரோவுடன் இணைந்து பங்கேற்றன.

    இதன் மூலம் ககன்யான் பணி மூலம் விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பி பூமிக்குத் திரும்பக் கொண்டுவரும் இலக்கை நோக்கி இஸ்ரோ முன்னேறி வருகிறது.

    Next Story
    ×