என் மலர்
இந்தியா

ஜார்க்கண்டில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம்: 6 பேரை மிதித்துக் கொன்றது
- 3 மாவட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
- கடந்த சில நாட்களாக கடுமையான வகையில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபேக் மாவட்டத்தில் திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேரை மிதித்துக் கொலை செய்துள்ளது.
சட்டவிரோத சுரங்கங்கள், வளர்ச்சிக்காக காடுகளை அழித்தல் போன்றவற்றால் காட்டில் இருக்கும் யானைகள் உணவுக்காக ஊருக்குள் நுழைகின்றன. அவ்வாறு நுழையும் யானைகள் மக்களை கொடூரமாக மிதித்து கொலை செய்யும் சம்பவம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
சுர்சு பிளாக்கில் உள்ள கோந்த்வார் கிராமத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு யானைக் கூட்டம் நுழைந்தது. ஊருக்குள் நுழைந்த யானைக் கூட்டம் வீடுகளை இடித்து சூரையாடியது. இதனால் வீட்டில் இருந்த மக்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். இருந்தாலும் வீட்டில் இருந்து ஓடி தப்பிக்க முயன்ற மக்களை யானைக் கூட்டம் தாக்கியது.
இதில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்த சேர்ந்த 4 பேரை யாரைக் கூட்டம் மிதித்து கொன்றன. மேலும் இருவரையும் மிதித்து கொன்றன. ஒரு குழந்தை படுகாயத்துடன் உயிர் பிழைத்தது. அதை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
போகாரா, ராம்கார்க், ஹசாரிபேக் மாவட்டங்களில் காட்டு யானைகள் பிளறிக் கொண்டு அட்டகாசம் செய்து வருவதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக நாங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தோம். துரதிருஷ்டவசமாக மக்கள் அவர்களுடைய வீட்டில் இருந்து வெளியேறும்போது, 6 பேரை மிதித்துக் கொன்றுள்ளது.






