என் மலர்tooltip icon

    இந்தியா

    உரிமம் பெறாமல் விலங்குகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும்: மும்பை மாநகராட்சிக்கு கோர்ட் உத்தரவு
    X

    உரிமம் பெறாமல் விலங்குகள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும்: மும்பை மாநகராட்சிக்கு கோர்ட் உத்தரவு

    • நதானி ஹைட்ஸ் சொசைட்டி எனும் குடியிருப்பு காலனியில் விலங்குகளை வெட்டுவதற்கு தடை கோரி வழக்கு
    • உரிமம் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த குடியிருப்பில் விலங்குகள் வெட்டப்படுவதை அனுமதிக்க வேண்டும்

    இன்று பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையின்போது தெற்கு மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு காலனியில், சட்டவிரோதமாக விலங்குகள் வெட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மும்பை மாநகராட்சி (BMC) அமைப்பிற்கு மும்பை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருக்கிறது.

    நதானி ஹைட்ஸ் சொசைட்டி எனும் குடியிருப்பு காலனியில் விலங்குகளை வெட்டுவதை முழுமையாக தடை செய்யக்கோரி, அந்த குடியிருப்பு சங்கத்தை சேர்ந்த ஹரேஷ் ஜெயின் என்பவர் தாக்கல் செய்த மனுவை பெஞ்ச் விசாரித்தது.

    வழக்கமான நீதிமன்ற நேரத்திற்குப் பிறகு நடைபெற்ற சிறப்பு அவசர விசாரணையில், நீதிபதிகள் ஜி.எஸ். குல்கர்னி மற்றும் ஜிதேந்திர ஜெயின் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அனுமதி வழங்க வேண்டிய மாநகராட்சி அமைப்பினால் உரிமம் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த குடியிருப்பில் விலங்குகள் வெட்டப்படுவதை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

    அந்த இடத்தில் கால்நடைகளை வெட்டுவதற்கு மாநகராட்சி உரிமம் வழங்கியிருக்காத பட்சத்தில், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியுடன் கால்நடைகளை வெட்டுவதைத் தடுக்க சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

    பிருஹன் மும்பை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோயல் கார்லோஸ், விலங்குகளை வெட்டுவதற்கு முழுமையான தடைவிதிப்பது முடியாது என்று வாதாடினார். மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அந்த சங்க வளாகத்தை ஆய்வு செய்வார்கள் என்றும், ஏதேனும் விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கார்லோஸ் உறுதியளித்தார்.

    பெஞ்ச் தனது உத்தரவில், ஒருவேளை ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகுந்த உதவியை வழங்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

    Next Story
    ×