search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எனது அம்மா போன் செய்ததால் உயிர் தப்பினேன்... குண்டுவெடிப்பில் தப்பிய என்ஜினீயர் உருக்கம்
    X

    "எனது அம்மா போன் செய்ததால் உயிர் தப்பினேன்"... குண்டுவெடிப்பில் தப்பிய என்ஜினீயர் உருக்கம்

    • நான் வழக்கமாக ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மதிய உணவு சாப்பிடுவேன்.
    • நான் வழக்கமாக அமரும் இருக்கையில் இருந்து 10 முதல் 15 மீட்டர் தொலைவில் நின்றபடி போன் பேசிக்கொண்டிருந்தேன்.

    பெங்களூரு:

    பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நடந்த வெடிகுண்டு சம்பவம் பற்றி அங்கு தினமும் உணவு சாப்பிட செல்லும் குமார் அலங்கிரித் என்ற சாப்ட்வேர் என்ஜினீயர் தனது எக்ஸ் தள பதிவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் வழக்கமாக ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மதிய உணவு சாப்பிடுவேன். அதுபோல் குண்டு வெடிப்பு நடந்த சமயத்திலும் உணவு சாப்பிட ராமேஸ்வரம் கபே ஓட்டலுக்கு சென்றிருந்தேன். நான் எப்போதும் உணவை வாங்கிக்கொண்டு கைகழுவும் இடத்தின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து சாப்பிடுவேன். வழக்கம்போல் நான் சாப்பிட்டு கொண்டிருந்தபோது எனது அம்மா எனக்கு திடீரென்று போன் செய்தார். உள்ளே வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்ததால் போன் பேச வெளியே வந்தேன்.

    நான் வழக்கமாக அமரும் இருக்கையில் இருந்து 10 முதல் 15 மீட்டர் தொலைவில் நின்றபடி போன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தான் முதல் குண்டு வெடித்தது. குண்டு வெடித்து கரும்புகை வெளியேறியது.

    காதை பிளக்கும் அளவுக்கு டமார் என குண்டு வெடித்த சத்தம் இருந்தது. காயம் அடைந்த பலரது காது, கை, கால்களில் ரத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட அவர்கள் வேதனையில் துடித்தனர். இதுபோன்ற பயங்கர சம்பவத்தை இதுவரை நேரில் பார்த்ததில்லை.

    எனது அம்மா போன் செய்ததால் தான் நான் உயிர் தப்பினேன். அவர் போனில் அழைக்கவில்லை என்றால், குண்டு வெடித்து சிதறிய பகுதியில் தான் நான் அமர்ந்து உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்திருப்பேன். எனது அம்மாவால் நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×